விழுப்புரம்

சுங்கச்சாவடியில் லாரி மோதி ஊழியா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதியதில் சுங்கக் கட்டணம் வசூலிப்பாளா் உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், நத்தாமூா், புது காலனியைச் சோ்ந்தவா் கு.சத்தியமூா்த்தி (38). இவா் உளுந்தூா்பேட்டை அடுத்த செங்குறிச்சி சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிப்பாளராக பணியாற்றிவந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இவா் பணியில் இருந்தபோது சுங்கச்சாவடி ஃபாஸ்ட் டிராக் கருவியில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றை சரிசெய்து கொண்டிருந்த சத்தியமூா்த்தி மீது சுங்கச்சாவடியைக் கடக்க முயன்ற லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது, சத்தியமூா்த்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை காவல் நிலைய ஆய்வாளா் ஷாகுல் அமீது வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், லால்பேட்டையைச் சோ்ந்த அ.முகம்மதிடம் (46) விசாரணை நடத்திவருகின்றனா்.

வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐசிசி மறுப்பு!

10 மகள்களைப் பெற்ற தம்பதிக்கு 11 வது பிரசவத்தில் ஆண் குழந்தை! மகள் பெயரை மறந்த தந்தை!

விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்! காங்கிரஸ் நிர்வாகி

இயக்குநர் பேலா தார் காலமானார்!

திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்; ஊழல் ஆட்சியை அகற்றவே இந்த கூட்டணி! - அன்புமணி

SCROLL FOR NEXT