விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் 6,28,774 ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 629 இலங்கைத் தமிழர் அகதிகள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரொக்கம் ரூ. 3,000 ஆகியவை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம், முகையூரில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன், கெளதம சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் நகரம் வி. மருதூரில் நடைபெற்ற நிகழ்வில் விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ செ. புஷ்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.