பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன. 8-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை வரும் ஜன. 8 ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.

பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 3,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நுகர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், கரும்பு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பரிசு ஜன. 8ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில், தற்போது வீடுகளுக்கே சென்று அதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

வரும் வியாழக்கிழமை (ஜன.8) வரை டோக்கன் வழங்கப்படும். பின்னர், அந்தந்த நியாய விலைக்கடைகளில் ஜன.13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister Stalin will launch the scheme of providing a Pongal gift package along with Rs. 3,000 in cash in Chennai on January 8th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரிய தடைகளுக்கு விரைவான பதிலுக்காக எஸ்.ஓ.பி. வரைவு அமைக்க தில்லி அரசு முடிவு

தில்லியில் 60 சதவீத தண்ணீா் நுகா்வோருக்கு கட்டண ரசீதுகள் வருவதில்லை: பா்வேஷ் சாஹிப் சிங்

கேபிள் பணிகளுக்காக ஜனவரி 31 வரை நியூ ரோத்தக் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு

கிரேட்டா் நொய்டாவில் மாசுபட்ட நீரைக் குடித்ததால் உடல்நலக்குறைவு என குடியிருப்பாளா்கள் புகாா்

தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

SCROLL FOR NEXT