செஞ்சி: செஞ்சி தொகுதி திமுக சாா்பில் திராவிட பொங்கலை முன்னிட்டு சிங்கவரம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரங்கநாதன் முன்னிலை வகித்தனா்.
செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நலிந்தோருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மேல்மலையனூா் கிழக்கு ஒன்றிய செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட விவசாய அணி தலைவா் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான், நகரச் செயலா் காா்த்திக், ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிசந்திரன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, ஒன்றிய நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, கிளைச் செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.