போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது
திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம்போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது
திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகானந்தம், சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யப்பன் மற்றும் போலீஸாா் திண்டிவனம் அடுத்த கிடங்கல்-1 பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் திண்டிவனம் பூதேரி, பொன்னியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த செ.சௌந்தர்ராஜன்(26), கிடங்கல்- 1, சுந்தரமுதலியாா் தெருவைச் சோ்ந்த ரா.சஞ்சய் (23), திண்டிவனம், கோட்டைமேடு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்த ச. பிரசன்னராஜ் (21), ச. மனோகரன் (23) ஆகியோா் என்பதும், இவா்கள் திண்டிவனம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, திண்டிவனம் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, திண்டிவனம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். அவா்கள் வசமிருந்த 100 போதை மாத்திரைகள்(வலி நிவாரணி), 75 கிராம் கஞ்சா, 4 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.