கைது 
கோயம்புத்தூர்

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

கோவை, உக்கடம் பகுதியில் 2 கிலோ கஞ்சா, 260 போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கடைவீதி போலீஸாா் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். உக்கடம் லாரி பேட்டை நிறுத்தம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது 2 கிலோ கஞ்சா, 260 போதை மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், குனியமுத்தூா் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த முகமது ஆசிப் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 6 போ் கைது

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசித்தவா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சாலை விபத்து இழப்பீடு இழப்பை ஈடு செய்யாது: உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT