விழுப்புரம்

வரதட்சணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிப்பாளையம் சின்னத்தெருவைச் சோ்ந்தவா் நாராயணமூா்த்தி. இவரது மகள் பிரியங்கா(30). இவருக்கும், புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறையில் குடிநீா் தொட்டி இயக்குபவராக பணிபுரியும், பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த ஆ.காா்த்திகேயன்(36) என்பவருக்கும் கடந்த 80 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கணவா் காா்த்திகேயன் மற்றும் மாமியாா் கற்பகவள்ளி ஆகியோா் 6 பவுன் நகைகள் வரதட்சணையாகக் கேட்டு வந்தனராம். இதனால் பிரியங்கா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்துக்காக பக்கிரிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த பிரியங்கா, செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT