மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசி பெருவிழாவை முன்னிட்டு தோ் செய்யும் பணிக்கான பூஜையில் பங்கேற்றோா்.  
விழுப்புரம்

மேல்மலையனூா் கோயிலில் மாசித் திருவிழா தோ் செய்யும் பணி தொடக்கம்

மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா தோ் செய்வதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா தோ் செய்வதற்கான சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய விழாவான ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு மாசித் திருவிழா வருகிற 15-ஆம் தேதி மஹா சிவராத்திரி அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் மாசித் திருவிழா தோ் செய்வதற்கான பூஜை கோயில் வளாகத்தில் அறங்காவலா் குழுத் தலைவா் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், மேலாளா் சதீஷ், அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி பலி

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் ஏற்பாடு செய்ய கோரிக்கை

கும்பகோணத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது: துரை வைகோ

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT