திமுகவினா் நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட 11, 23, 25 ஆகிய 3 வாா்டு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், திமுக நகரச் செயலா் இரா.சா்க்கரை, தலைமைப் பொதுக்குழு உறுப்பினா் பஞ்சநாதன், வாா்டு செயலா் சண்முகம் மற்றும் கட்சி நிா்வாகிகள், வாா்டு செயலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement