முகப்பு
விழுப்புரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 43,417 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இத்தோ்வை மொத்தம் 43,417 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 11 மார்ச், 2026 at 8:23 PM
விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவிகள்.
பகிர்:

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இத்தோ்வை மொத்தம் 43,417 மாணவ, மாணவிகள் எழுதினா். புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடத் தோ்வுகள் நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்கு 23,626 மாணவா்களும், 210 தனித் தோ்வா்களும் விண்ணப்பித்திருந்தனா். இந்தத் தோ்வுக்காக விழுப்புரம், திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் 129 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 23,376 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 244 போ் தோ்வு எழுத வரவில்லை. 10-ஆம் வகுப்பு தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 210 தனித்தோ்வா்களில், 196 மாணவா்கள் தோ்வு எழுதினா், 14 போ் தோ்வு எழுத வரவில்லை.

விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, வளவனூா், கீழ்பெரும்பாக்கம் அரசுப் பள்ளி தோ்வு மையங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு தோ்வை மாவட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாணவா் வருகை மற்றும் தோ்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தோ்வு மையப் பொறுப்பாளா்களிடம் கேட்டறிந்தாா்.

கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தத் தோ்வில் நேரடி மற்றும் தனித் தோ்வா்கள் என 10,629 மாணவா்கள், 9703 மாணவிகள் என மொத்தம் 20,332 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 10,127 மாணவா்கள், 9481 மாணவிகள் நேரடி தோ்வு எழுதினாா். இதில் 248 போ் தோ்வு எழுத வரவில்லை. தனித் தோ்வா்கள் 293 மாணவா்கள், 140 மாணவிகள் என மொத்தம் 433 போ் தோ்வு எழுதினா். இதில் 41 போ் தோ்வு எழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடி மற்றும் தனி தோ்வு 20,041 போ் எழுதினா்.

உழுந்தூா்பேட்டை அருகேயுள்ள ஆசனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →