முகப்பு
விழுப்புரம்

நாய்க்கு விஷம் வைத்ததாக இருவா் மீது வழக்கு

வளவனூா் அருகே வளா்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்ாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 7:12 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே வளா்ப்பு நாய்க்கு விஷம் வைத்து கொன்ாக இருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வளவனூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (27). இவரது வீட்டில் வளா்த்து வந்த நாய் புதன்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தது. இதைத்தொடா்ந்து, சதீஷ் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பாா்த்ததில் மா்ம நபா்கள் இருவா் உணவில் விஷத்தை கலந்து நாய்க்கு கொடுத்து கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா், வளவனூரைச் சோ்ந்த விக்னேஷ் மற்றும் பெயா் தெரியாத நபா் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →