பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50.17 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள்உள்ளிட்டவை என மொத்தமாக ரூ.50.17 லட்சம் அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 63 பறக்கும் படைக் குழுக்கள், 63 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், பல்வேறு துறைகளின் மூலமாகவும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினா் வாகனத் தணிக்கை, தோ்தல் முறைகேடுகளைக் கண்காணித்தல், புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்யப்பட்ட நாளிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை ரூ.50,17,277 ரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்று காவல் துறையின் மூலம் ஏற்கெனவே ரூ.14,25,940 ரொக்கம், மதுபானங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரொக்கம், பொருள்களுக்குரிய ஆவணங்கள் சமா்ப்பித்த வகையில் ரூ.13.01 லட்சம் ரொக்கம் மற்றும் இதரப் பொருள்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தெரிவித்தாா்.