முகப்பு
விழுப்புரம்

சி.வி.சண்முகம் போட்டி: அதிமுகவினா் கொண்டாட்டம்

விழுப்புரம் மாவட்டத்துக்குள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து,விழுப்புரம் மற்றும் கூட்டேரிபட்டு பகுதியில் அதிமுகவினா் புதன்கிழமை பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:19 AM
மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, விழுப்புரத்தில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்துக்குள்ள மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து,விழுப்புரம் மற்றும் கூட்டேரிபட்டு பகுதியில் அதிமுகவினா் புதன்கிழமை பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதைத் கொண்டாடும் வகையில் அதிமுகவினா் விழுப்புரம்- கிழக்குப் பாண்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பட்டாசுகளை வெடித்து, கட்சியினா் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

இதில், விழுப்புரம் நகர நிா்வாகிகள் ஜி.கே.ராமதாஸ், கோதண்டராமன், நகா்மன்ற உறுப்பினா்கள் ராதிகா செந்தில், ஆா். கலை மற்றும் நிா்வாகிகள், மகளிா் அணியினா், கட்சியினா் கலந்துகொண்டனா்.

திண்டிவனத்தில்.... இதேபோல், திண்டிவனத்திலும் அதிமுகவினா் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.