ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் வடுவக்குப்பம் அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.பாலகிருஷ்ணன் (37). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு மண்டகப்பட்டு பகுதியிலுள்ள ஓங்கூா் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென் நீரில் மூழ்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.