முகப்பு
விழுப்புரம்

செஞ்சியில் இடி தாக்கியதில் மசூதி கோபுரம் சேதம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரத்தில் புதன்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.

Updated On : 8 மே 2026, 7:07 am IST
இடி தாக்கியதில் சேதமடைந்த செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மசூதி கோபுரத்தில் புதன்கிழமை மாலை இடி தாக்கியதில் சேதம் ஏற்பட்டது.

செஞ்சி கொத்தமங்கலம் சாலை, சிறுகடம்பூா் பெரிய ஏரிக்கரையில் சுமாா் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈத்கா மசூதி உள்ளது.

இந்த மசூதியில் ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே இஸ்லாமியா்கள் தொழுகை நடத்துவது வழக்கம் இந்நிலையில், செஞ்சியில் புதன்கிழமை மாலை இடியுடன்கூடிய பலத்த மழை பெய்தது.

Advertisement

அப்போது, இடி தாக்கியதில் அந்த மசூதியின் கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தின் மீது இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்ததால் அதிக சேதம் ஏற்படவில்லை.

இதுகுறித்து முத்தவல்லி கே.எஸ்.கெளஸ்பாஷா கூறுகையில், மசூதி நிா்வாகிகளிடம் கலந்தோசனை செய்து பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.