தமிழகத் தேர்தல் களம் 2016

காதோடுதான் -தேர்தல் கிசு கிசு: நோட்டாவுக்கான வாய்ப்பு மிகமிக அதிகரிக்கும்?

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை 49 ஓ என்ற படிவத்தை வழங்கி அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம், பின்னர், அதை நோட்டா என அறிமுகப்படுத்தி அதற்கான சின்னத்தையும் இப்பேரவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

கு. வைத்திலிங்கம்

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை 49 ஓ என்ற படிவத்தை வழங்கி அறிமுகப்படுத்திய தேர்தல் ஆணையம், பின்னர், அதை நோட்டா என அறிமுகப்படுத்தி அதற்கான சின்னத்தையும் இப்பேரவைத் தேர்தலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதுவரை இல்லாத அளவில் 2016 மே மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 5 முனை போட்டியாக இருக்கும் நிலையில், வெற்றி பெறுபவரின் வித்தியாசம் அதிகபட்சமாக இருக்க முடியாது என்று கருதப்படுகிறது.

2011 பேரவைத் தேர்தலின்போது நோட்டாவுக்கு 25,134 வாக்குகள் மட்டுமே மாநில அளவில் கிடைத்த நிலையில், 2014- மக்களவைத் தேர்தலில் இது 5.68 லட்சமாக உயர்ந்ததது. இது கிட்டத்தட்ட 1.4 சதவிகித வாக்குகளாகும். சில அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை நெருங்கும் நிலையில் உள்ள நோட்டாவின் வாக்கு சதவிகிதம் 2016 பேரவைத் தேர்தலில் 2 சதவிகிதத்தை நெருங்கலாம் எனக் கருதப்படுகிறது.

2011 பேரவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் 3,407 வாக்குகளும், காஞ்சிபுரத்திóல் 1397, திருவள்ளூரில் 1347, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் தலா 1306 என நோட்டாவுக்கு வாக்குகள் கிடைத்தன. குறைந்தளவாக அரியலூர் மாவட்டத்தில் 106 வாக்குகள் மட்டும் பதிவாகியிருந்தன.

ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக நீலகிரி மக்களவைத் தொகுதியில் 46,559 -ம் அதற்கு அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் 27,676 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்தன.

தொகுதி வாரியாக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்: மத்திய சென்னை, தென் சென்னை - தலா 20,000, வடசென்னை-13,000,. திருச்சி- 22,848, திருவள்ளூர்- 23,598, கோவை -17,428, அரக்கோணம்- 10,370, சிதம்பரம்- 12,138, கள்ளக்குறிச்சி- 10,901, காஞ்சிபுரம்- 17.736, நாகை-15,662, தென்காசி-14,492, விருதுநகர் -13,225, திருப்பூர்- 13,941, கரூர்- 13,763, திருநெல்வேலி - 12,893.

இதுவரை இல்லாத அளவில் தற்போது நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் சற்று வித்தியாசமான களத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதிகளவில் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பது சில தொகுதிகளில் மட்டும்தான் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெறும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானதாகும். கடந்த பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கோவி.செழியன், தனக்கு அடுத்தப்படியாக வந்த அதிமுக வேட்பாளர் பாண்டியராஜனைக் காட்டிலும் 394 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். அதுபோன்ற நிலைமை தற்போதைய பலமுனைப் போட்டி காரணமாக இத்தேர்தலிலும் பல வேட்பாளர்கள் சந்திக்க நேரிடலாம்.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், வேட்பாளர்களைத் தேர்வு செய்து முதல் வாக்குகளைச் சிதறாமல் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். கடந்த தேர்தல்களில சில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மீது இருந்த அதிருப்தி, ஆட்சி நடத்திய கட்சி மீது இருந்த அதிருப்தி போன்றவை நோட்டாவுக்கு வாக்களித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

100% வாக்களிப்பு விழிப்புணர்வு மும்முரமாக நடைபெறும் இத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்பர்; இதனால், நோட்டாவுக்கான வாய்ப்பு மிகமிக அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT