தமிழகத் தேர்தல் களம் 2016

இல்லந்தோறும் திமுக தேர்தல் அறிக்கையை கொண்டு செல்லுங்கள்: கே.என்.நேரு

இல்லந்தோறும் திமுகவின் தேர்தல் அறிக்கையை கொண்டு செல்லுங்கள் என்றார் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு.

கு. வைத்திலிங்கம்

இல்லந்தோறும் திமுகவின் தேர்தல் அறிக்கையை கொண்டு செல்லுங்கள் என்றார் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், மேற்குத் தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேறறு மேலும் அவர் பேசியது:

திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த அறிக்கைகளை துண்டுபிரசுரமாக்கி வீடுதோறும் விநியோகித்து,  இல்லந்தோறும் தேர்தல் அறிக்கையை கொண்டு செல்ல வேண்டும்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 18-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளார். தேர்தல் பிரசாரத்தில் கட்சியினரையும் பொதுமக்களையும் அதிகளவில் பங்கேற்கும் வகையில் பணிகளை கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வந்த போது, அதிகமான கார்களில் வந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்காக இருந்தாலும் சந்திப்போம்.

தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டணிக் கட்சிகளின் கொடிகளையும் தவறாமல் கட்டுங்கள். ஒவ்வொருவரும் இணைந்து செயல்படுங்கள். திமுக தலைவர் கருணாநிதி திருச்சியில் ஏப்ரல் 27-ம் தேதி ஜீ கார்னர் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ள கூட்டத்திலும் கட்சியினர் அதிகளவில் பங்கேற்க வைக்க வேண்டும்.

பேரவைத் தேர்தலில ஜெயித்தால்தான் கலைஞர் ஆட்சி,  ஜெயிக்கவில்லை எனில் வழக்குத்தான், எல்லோரும் மீதும் வழக்குóததான் என்பதை உணர்ந்து, கட்சி வேட்பாளர்களின் வெற்றிóக்குத் தீவிரமாகப் பாடுபட வேண்டும் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் பேசும் போது,சமுதாயத்திலுள்ள பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள் திருவெறும்பூர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கம் எம். பழனியாண்டி, லால்குடி அ.சௌந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் எஸ்.கணேசன், துறையூர் செ.ஸ்டாலின்குமார், மணப்பாறை எம்.ஏ. முகமது நிஜாம் ஆகியோர் தங்களுக்கு வாக்கு சேகரித்து பேசினர்.

கூட்டத்தில் திமுக வெளியீட்டுச் செயலர் என்.செல்வேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் ஜி. ஜெரோம் ஆரோக்கியராஜ், என்.ஜயப்பிரகாஷ், ஆர்.சி.பாபு, மனிதநேய மக்கள் கட்சி, புதியதமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசினர்.

முன்னதாக, வடக்கு மாவட்ட திமுக செயலர் என். தியாகராஜன் வரவேற்றார். மாநகர திமுக செயலர் மு. அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT