முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

கருணாநிதி கொடுத்த டி.வி இன்று எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது: ஸ்டாலின்

திமுக ஆட்சியில் தரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இன்றும் எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளதாயும், ஜெயலலிதா அரசு வழங்கிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் வீடுகளில் குப்பையில் உள்ளதாயும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்

தமிழகத் தேர்தல் களம் 2016

கருணாநிதி கொடுத்த டி.வி இன்று எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது: ஸ்டாலின்

திமுக ஆட்சியில் தரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இன்றும் எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளதாயும், ஜெயலலிதா அரசு வழங்கிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் வீடுகளில் குப்பையில் உள்ளதாயும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி இன்றும் எல்லா வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளதாயும், ஜெயலலிதா அரசு வழங்கிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் வீடுகளில் குப்பையில் உள்ளதாயும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை பேருந்து நிலையம் அருகே அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

எப்படி ஜெயலலிதா அரசு கொடுத்த விலையில்லா பொருட்கள் எல்லாம் வீடுகளில் குப்பையிலோ அல்லது பழைய இரும்புக் கடைகளிலோ பயனற்று கிடக்கிறது. அதுபோன்று அவரது அரசும் போக வேண்டும். கருணாநிதி கொடுத்த இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி இன்றும் அனைத்து வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. எனவே டி.வி. யை யாரும் மறக்க மாட்டீர்கள். புதிய தமிழகம் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிரும் முத்துக்குமாருக்கு டி.வி. சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அரசு அதிகாரிகள் வியாபாரிகளிடம் வசூல் பண்ணும் நிலை தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகியுள்ளது. திமுகவின் 2006 தேர்தல் அறிக்கையை ஹீரோ என்று மக்கள் கூறினார்கள். 2016 -ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை சூப்பர் ஹீரோ என்கிறார்கள். ஹீரோவின் கடமை வில்லனிடமிருந்து காதலியை காப்பாற்ற வேண்டும். அதுபோல ஜெயலலிதா என்ற வில்லியிடம் இருந்து தமிழகத்தைக் காப்பாற்ற கருணாநிதி என்றும் ஹீரோ புறப்பட்டுவிட்டார்.

ஜெயலலிதா 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு 54 தலைப்புகளில் கொடுத்த வாக்குறுதிகளையும், சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ அறிவித்த திட்டங்கள் எதையுமே நிறைவேற்றவில்லை. எந்த நன்மையையுமே மக்களுக்கு செய்யாமல், செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்டுக்கொண்டு செல்கிறார் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மல்லி கு.ஆறுமுகம், நகரச் செயலாளர் அய்யாவுப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வமணி, மாயாண்டி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →