காங்கிரஸ்-என்.ஆர். காங். கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
மக்களை மறந்து செயல்பட்ட காங்கிரஸ்- என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
மக்களை மறந்து செயல்பட்ட காங்கிரஸ்- என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
தேமுதிக, மக்கள்நலக்கூட்டணி சார்பில் புதுச்சேரி திருபுவனை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.கலிவரதனுககு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை இரவு மதகடிப்பட்டில் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் பிரசாரம் செய்து பேசியதாவது:
புதுச்சேரி பிரதேசத்தில் தேமுதிக, மக்கள்நலக்கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் இடம் பெயர்ந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் என்.ரங்கசாமி ஆட்சியில் ரியல்எஸ்டேட் அதிபர்களும், சுயநிதி கல்லூரி அதிபர்களுமே வளர்ந்துள்ளனர்.
இந்தியாவிலேயே சிறிய பிரதேசமாக உள்ள புதுச்சேரியில் தான் வேலையின்மையில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. எனவே தான் இங்கு ஆட்சி செய்த காங்கிரஸ், திமுக, கட்சியானாலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானாலும சரி இவர்கள் மக்களை மறந்தவர்கள். இத்தேர்தலில் அக்கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.
முதன் முதலில் கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபட்டு வரும் தேமுதிக, மக்கள்நலக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மக்களுக்காக முழுநேரமாக அர்ப்பணித்தவர் எல்.கலிவரதன் அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்..
மதகடிப்பட்டுக்கு வந்த ஜி.ராமகிருஷணனுக்கு தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்கள் உலகநாதன், சங்கர், அன்புமணி, ஆனந்தன், பத்மநாபன், அ.க.விடுதலைச்செல்வன், கலியபெருமாள், உள்ளிட்ட திரளான கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.