60-70% வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை: பா.ஜ.க.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 60 முதல் 70 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரா.ஸ்ரீநிவாசன் கூறினார்.
தமிழகத் தேர்தல் களம் 201660-70% வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்யவில்லை: பா.ஜ.க.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 60 முதல் 70 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரா.ஸ்ரீநிவாசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 60 முதல் 70 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறோம் என்பதை இதுவரை முடிவு செய்யவில்லை என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் டாக்டர் ரா.ஸ்ரீநிவாசன் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிப்பதற்காக திங்கள்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சியின் தேசிய தலைவர் அமித ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தமிழகத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்து பிற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் பிரசாரம் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே பிரதிபலித்தது. தமிழக தேர்தல் களத்தில் இது பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும்.
சுமார் 1 கோடி புதிய வாக்காளர்களும், ஏற்கனவே உள்ள வாக்காளர்களில் 60 முதல் 70 சதவீத வாக்காளர்களும் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை இதுவரை முடிவு பண்ணவில்லை.
போலியான மதச் சார்பின்மையை கடைபிடிக்கும் திமுக வெற்றி கனவில் உள்ளது. மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விட்டது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சியைத் தடுத்து, வரிச்சுமையை அதிகரிப்பதாக உள்ளது.
10 ஆயிரம் கோடியில் தமிழகத்திற்கு வந்த நான்கு வழிச் சாலைத் திட்டம், நவோதய பள்ளிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கு இனக்கமான அரசு தமிழகத்தில் உருவாக வேண்டும். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை 100 சதவீதம் தடுத்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் பாராட்டுக்குரியது என்றார்.