முகப்பு
தமிழகத் தேர்தல் களம் 2016

மாஹே தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி: 6 முறை வென்ற வல்சராஜ் தோல்வி

புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் ஒன்றான மாஹேயில் சுயேச்சை வேட்பாளர் டாக்டர் வி.ராமச்சந்திரன் 2139 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வல்சராஜை வென்றார்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் ஒன்றான மாஹேயில் சுயேச்சை வேட்பாளர் டாக்டர் வி.ராமச்சந்திரன் 2139 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வல்சராஜை வென்றார்.

மாஹே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்று அமைச்சராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் வல்சராஜ். தற்போது நடைபெற்ற தேர்தலில் அவரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பேராசிரியர் வி.ராமச்சந்திரனும், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் விபி.அப்துல் ரகுமானும் போட்டியிட்டனர்.

இதில் பேராசிரியர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மாஹே தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் தகர்ந்தது.

இது அப்பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

ஏனாம், மாஹே தொகுதிகளில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில் மாஹே தொகுதியில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.