தமிழகத் தேர்தல் களம் 2016

அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

இந்நிலையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டப் பேரவைக் குழு உறுப்பினராக, அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT