தமிழகத் தேர்தல் களம் 2016

ஒரே தொகுதியில் ஏழு முறை வென்ற துரைமுருகன், செங்கோட்டையன்

திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் ஏழு முறை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

தினமணி

சென்னை: திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியிலும், அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் ஏழு முறை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் 1971, 1989, 1996, 2001, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுதவிர 1997, 1980 ஆம் ஆண்டுகளில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகன் வெற்றி பெற்றார்.

காட்பாடி தொகுதியில் மட்டும் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து முறை அவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலில், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலில் மட்டும் துரைமுருகன் அதிமுக வேட்பாளர்  கலைச்செல்வியிடம்தோல்வியடைந்தார்.

கோபி - செங்கோட்டையன்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து 7-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1972 ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கியபோது, அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன், 1977 ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து கோபிச்செட்டிப்பாளையம் தொகுதிக்கு மாறினார் செங்கோட்டையன். இங்கு அவர் கடந்த 1980, 1984, 1989, 1991, 2006, 2011 என ஆறு முறை வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு 11 ஆயிரத்து, 223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

1996 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் ஜி.பி.வெங்கிடுவிடம் தோல்வியடைந்தார் செங்கோட்டையன்.

மொத்தத்தில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து மட்டும் 7 முறை சட்டப் பேரவைக்கு செங்கோட்டையன் தேர்தந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT