தமிழகத் தேர்தல் களம் 2016

தேர்தல் ஒத்திவைப்பு: அரவக்குறிச்சியில் வேட்பாளர்கள் பிரசாரம் நிறுத்தம்

அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 23-ம்தேதி நடைபெறவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளதைத் தொடர்ந்து, மாலையில் நடைபெறிவிருந்த திமுக, அதிமுக பிரசாரம் நிறுத்தப்பட்டது.

தினமணி

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 23-ம்தேதி நடைபெறவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளதைத் தொடர்ந்து, மாலையில் நடைபெறிவிருந்த திமுக, அதிமுக பிரசாரம் நிறுத்தப்பட்டது.

அதிகளவில் பணம் பட்டுவாடா செய்ததாக அரவக்குறிச்சியில் நடைபெறவிருந்த தேர்தல் மே 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து 23-ம்தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 23 ஆம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

மேலும் அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி, திமுக வேட்பாளர் கேசி.பழனிசாமி, பாமக வேட்பாளர் பிஎம்கே.பாஸ்கரன் உள்ளிட்டோர்  தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்தது. இதையடுத்து மாலையில் பள்ளப்பட்டியில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசாரத்தை திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் கைவிட்டனர். இதனால் அரவக்குறிச்சி தொகுதி அமைதி தொகுதியாக மாறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT