தமிழகத் தேர்தல் களம் 2016

மாற்று அரசியல் விதையானது ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல: திருமா

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்பதை தேர்தல் உணர்த்தியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தினமணி

சென்னை: நாங்கள் விதைத்த மாற்று அரசியல் விதை ஓர் ஆண்டில் விளையும் பயிர் அல்ல என்பதை தேர்தல் உணர்த்தியிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மக்கள் நலக் கூட்டணி முன் வைத்த மாற்று அரசியலுக்கு ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும், இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும், இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.

அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் பணத்தை வாரி இறைத்ததையும் மீறி எனக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் ஊழல் கறை இல்லாதது.

விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் கூட்டணி ஆட்சி உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் தொய்வின்றித் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 746 புள்ளிகளுடனும், நிஃப்டி 221 புள்ளிகளுக்கு மேல் நிறைவு!

ஜியோ பயனர்கள் இலவசமாக நெட்ஃபிளிக்ஸ் பார்க்கலாம்! எப்படி?

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

இதுவரை இல்லாத பேட்டரி திறன்: ஓப்போ கே 13 டர்போ இந்தியாவில் அறிமுகம்!

SCROLL FOR NEXT