மாதப் பலன்கள்

ஆகஸ்ட் மாதப் பலன்கள் - கன்னி

கன்னி ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கிரகநிலை:

ராசி ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.08.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன்  லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

21.08.2025 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25.08.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதி கரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும்.

உத்திரம்:

இந்த மாதம் முயற்சிகள் கை கூடும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும்.  உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் மனதில் இருக்கும் கவலைகள் பறந்தோடும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

சித்திரை:

இந்த மாதம் வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

 பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.  

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 23, 24, 25

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT