வார பலன்கள் - கடகம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழில் சீராகவே நடக்கும். வாக்குறுதி கொடுக்கும்போது கவனமாக இருப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கடுமையாக உழைத்துப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் எதிலும் அகலக்கால் வைக்காமல் வியாபாரத்தை நடத்துவீர்கள். விவசாயிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் மற்றவர்களிடம் பேசும்போது சிந்தித்துப் பேசுவீர்கள். கலைத்துறையினருக்கு கிடைக்கும் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பெண்கள் குடும்பத்தின் மேன்மையைக் காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
Advertisement
சந்திராஷ்டமம் - டிசம்பர் 25.