வார பலன்கள் - சிம்மம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
தொழிலில் மேன்மை உண்டாகும். வருமானத்தில் படிப்படியான உயர்வுகளைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களிடம் இருந்த அவநம்பிக்கைகள் அகலும். வியாபாரிகள் கூட்டாளிகளின் உதவியுடன் கடன்களை அடைத்துவிடுவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொலைதூரச் செய்திகளால் ஆனந்தம் அடைவீர்கள். கலைத்துறையினர் அசதிகள் நீங்கி சுறுசுறுப்புடன் கலைப்பணிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
Advertisement
சந்திராஷ்டமம் - இல்லை.