வார பலன்கள் - மீனம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளும் ஆதரவு தருவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சலிப்படையாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைபொருள்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
பெண்கள் இனிய தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பார்கள். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற பெற்றோர் உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.