ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மற்றும் எனது மனைவியின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் உள்ளனவா? எந்தத் தொழில் செய்யலாம்? எனது மனைவி, மகளின் உடல்நலம் எவ்வாறு இருக்கும்? சொந்த வீடுகட்டும் வாய்ப்புண்டா?- வாசகர், ஈரோடு

DIN

உங்களுக்கு மகர லக்னம், கன்னி ராசி. தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருமஹா தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் லக்னாதிபதியான சனிபகவானின் தசையில் செய்தொழிலில் ஏற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை நல்லபடியாக அமையும். நீங்கள் செய்து வரும் மார்க்கெட்டிங் துறையே ஏற்றதாகும். உங்கள் மனைவிக்கு கடக லக்னம், துலாம் ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இதில் 2019 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு நன்மைகள் கூடத்தொடங்கும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்திலுள்ள லக்னாதிபதியை பார்வை செய்வதால் முழுமையான கஜகேசரி யோகம் உண்டாகிறது. அதனால் ஆரோக்கியம் இறுதிவரை சீராக இருக்கும். உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் சந்திர மஹாதசை 2019 வரை நடக்கும். அதற்குப்பிறகு நடக்கும் லாபாதிபதியின்தசையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். அதனால் உங்கள் குடும்பத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT