ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது. எப்போது மறுமணம் நடைபெறும்? - வாசகர், முசிறி

DIN

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியான சூரியபகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து சிறப்பான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.  களத்திர ஸ்தானத்தில் ஆறாமதிபதியான சுக்கிரபகவான் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் குருமஹா தசையில் பாக்கியாதிபதியான சூரியபுக்தி நடைபெறுகின்றது. சூரியபகவானை குருபகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்வை செய்வது சிறப்பு. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் களத்திர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி புதன்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT