ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு சொந்த கடை எப்பொழுது கிடைக்கும்? கடன் அடைபட்டுவிடுமா? என் மகன் எப்பொழுது ஆடிட்டர் படிப்பை முடிப்பார்? - ராஜேந்திரன், பெரம்பூர்

DIN

உங்களுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் பாக்கியாதிபதியுமாகி உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதும் சிறப்பாகும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். அதனால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சொந்தமாக கடையை வாங்குவீர்கள். லக்னாதிபதியும் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் கடன்களும் அடைந்துவிடும். உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம் . கல்வி ஸ்தானாதிபதி உச்சம் பெற்று கல்விக்காரகருடன் இணைந்து இருக்கிறார். கல்வி ஸ்தானத்தை குரு சந்திர பகவான்கள் பார்வை செய்கிறார்கள். தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர கல்வி காரகரான புதபகவானின் தசை நடக்கின்ற படியால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை முடித்து விடுவார். உங்கள் குடும்ப மேன்மைக்காக பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT