ஜோதிட கேள்வி பதில்கள்

எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?- மீனாட்சி, மதுராந்தகம்

DIN

உங்கள் கணவருக்கு ரிஷப லக்னம். கன்னி ராசி. லக்னத்திற்கும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து உச்சம் பெற்ற குருபகவானால் பார்க்கப்படுகிறார். தனம் மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் நீச்சம் பெற்று அந்த வீட்டுக்கதிபதியான குருபகவான் உச்சம் பெற்று இருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் குருமகா தசையில் இறுதிப்பகுதி நடப்பதும் சிறப்பு. உங்களுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதி உச்சம் பெற்று கர்மாதிபதியான செவ்வாய்பகவானுடன் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் பூர்வபுண்ணிய புத்திரகாரகருடனும் களத்திர ஸ்தானாதிபதியுடனும் இணைந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். சுக பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மேலும் உங்களுக்கு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் புத்திர பாக்கியம் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT