ஜோதிட கேள்வி பதில்கள்

நாங்கள் கடன்பிரச்னையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இரண்டு வருடங்களாக உடல்நிலையும் சரியில்லை.  எதிர்காலம் எவ்வாறு உள்ளது? எனது கணவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை  வைத்திருக்கிறார். சுமாரான வியாபாரம்தான். எனக்கு அரசு வேலை கிடைக்குமா?  குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- வாசகி, பொன்னமராவதி

DIN

உங்கள் கணவருக்கு பாக்கியாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தற்சமயம் தசை நடத்துகிறார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவரின் செய்தொழில் ஏற்றமடையத் தொடங்கும். உங்களுக்கு தைரிய  ஸ்தானத்தில் வலுவான லக்ன சுபர்கள் இணைந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதாலும் தற்சமயம் குடும்பாதிபதியின் தசை நடப்பதாலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு அரசு அல்லது அரதசு சார்ந்த வேலை அமையும். இருவருக்கும் புத்திர ஸ்தானம் மற்றும் ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் குழந்தைகளின் எதிர்காலம் சீராக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT