ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு சதாபிஷேகம் செய்ய நாள் குறிப்பிட்டுச் சொல்லவும். வருங்காலம் எப்படி இருக்கும்? எனக்கு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செய்ய பிராப்தம் இருக்கிறதா? தற்சமயம் என்ன தசாபுக்தி நடைபெறுகிறது? - வைத்தியநாதன், வேங்கிக்கால்

DIN

உங்களின் ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மாலை ஆறரை மணி அளவில் பிறந்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிதுன லக்னம், அஸ்த நட்சத்திரம் இரண்டாம் பாதம், கன்னி ராசி என்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலகட்டத்திற்குள் வளர்பிறையில் உங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த சுப முகூர்த்தத்தில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். தற்சமயம் லக்ன, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. புதபகவான் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானுடன் ஆறாம் வீட்டில் இணைந்து தசையை நடத்துகிறார். இதனால் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஆன்மிகக் கிரகங்கள் வலுவாக உள்ளதால் ஆலய குடமுழுக்கு செய்யும் பாக்கியமுண்டு. பிரதி தினமும் விநாயகரை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT