ஜோதிட கேள்வி பதில்கள்

என் சகோதரியின் மகள் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 6 வருடங்களாக வரன் பார்த்து வருகிறார்கள். எப்போது திருமணம் கைகூடும்? அந்த நாட்டிலேயே வரன் பார்க்கிறார்கள். நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். அக்கா, மாமா குடும்பத்தில் அனைவரின் உடல்நிலை எவ்வாறு இருக்கும்? - வாசகி, அம்பத்தூர்

DIN

உங்கள் சகோதரி மகளுக்கு மீன லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவானும் தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானும் தைரிய ஸ்தானத்தில் இணைந்து குருமங்கள யோகத்தைக் கொடுப்பது சிறப்பு. குருபகவானின் பார்வை களத்திரம், பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களின் மீது படிகிறது. அவருக்கு தற்சமயம் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சூரியபகவானின் தசை முடியும் தருவாயில் உள்ளது. தொடர்வதும் களத்திர ஸ்தானாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் பூர்வபுண்ணியாதிபதியின் தசையாகவும் இருப்பதால் தொடர்ந்து நன்மைகள் உண்டாகும். அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவர் வசிக்கும் நாட்டிலேயே வேலைப் பார்க்கும் உங்கள் குலத்திலேயே உள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிதுர்தோஷம் இல்லை. பெற்றோருக்கு இறுதிவரை ஆதரவாக இருப்பார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT