ஜோதிட கேள்வி பதில்கள்

என் பேத்திக்கு ஜாதகம் எழுதிய ஜோதிடர் பரணி நட்சத்திரம் 1- ஆம் பாதம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே ஜாதகம் கணினி மூலம் கணிக்கப்பட்டதில் பரணி 2-ஆம் பாதம் என்று வருகிறது. இதில் எது சரி? எப்போது திருமணம் கைகூடும்? - வாசகர், தூத்துக்குடி

DIN

உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், பரணி நட்சத்திரம் 2- ஆம் பாதம் என்று வருகிறது. பிறப்பில் சுக்கிரமகா தசையில் இருப்பு 11 வருடங்கள், 9 மாதங்கள், 7 நாள்கள் என்று வருகிறது. செவ்வாய்பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ராகுபகவானுடன் அமர்ந்து சனி மற்றும் கேது பகவான்களால் பார்க்கப்படுவதால் செவ்வாய் தோஷம் இல்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு செவ்வாய்பகவானை குருபகவான் ஒன்பதாம் பார்வையாக பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள சம அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT