ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? காலசர்ப்ப தோஷம் உள்ளதா? - வாசகர், வத்தலகுண்டு

DIN

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி சூரியபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். இதனால் குடும்ப வாழ்க்கை சீராகவே செல்லும். அவருடன் உச்சம் பெற்ற பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியும் இணைந்து இருப்பது சிறப்பு. ஆறாம் வீட்டில் குருபகவான் ஆட்சி பெற்று நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். பாக்கியாதிபதி முழுமையான பலம் பெற்றிருப்பதும் சிறப்பாகும். பாக்கியாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. ஆறாம் வீட்டில் பன்னிரண்டாம் வீட்டுக்கதிபதியான புதபகவானும் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தைப் பெறுகிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி ஏழாம் வீட்டிற்கும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் மாங்கல்ய ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்று சுக லாபாதிபதியான சுக்கிரபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. ராகு- கேது பகவான்கள் மூன்று ஒன்பதாம் வீடுகளில் அமர்ந்து லக்னம் வெளியில் இருப்பதால் காலசர்ப்ப தோஷமோ அல்லது சர்ப்ப தோஷமோ இல்லை என்று கூறவேண்டும். தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் சுயபுக்தி நடக்கத் தொடங்கி இருப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT