ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளின் ஜாதகப்படி அவளுக்கு சகோதரர் உண்டா? - வாசகி, மதுரை

DIN

உங்கள் பேத்திக்கு கும்ப லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள். சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் சூரியபகவானுடன் இணைந்து சுக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னம், தைரிய ஸ்தானம் (இளைய சகோதரம்) மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தைரியம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்குள் சகோதர பிறப்பு உண்டாகும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT