ஜோதிட கேள்வி பதில்கள்

நான் தகுதிக்கு மீறிய கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டேன். இதிலிருந்து மீண்டு வர வழி உள்ளதா? - வாசகர்

DIN

உங்களுக்கு மகர லக்னம், கடக ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சி பெற்று சச மகாயோகத்தைக் கொடுக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் பெற்று அமர்ந்து ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கிறார். களத்திர ஸ்தானத்தில் குருசந்திர யோகம் உண்டாகிறது. குடும்ப ஸ்தானத்தில் புதஆதித்யர்கள் இணைந்திருப்பதும், பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருப்பதும் சிறப்பு. தற்சமயம் சுக்கிரபகவானின் தசையில் முன்பகுதி முடிந்து பின்பகுதி நடக்கத் தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓரளவு கடன் அடைந்து விடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் முழுமையான கடன்கள் அடைந்துவிடும். பயப்படும் படியாக எதுவும் இல்லை. நீங்கள் செய்து வரும் வாகனம் சம்பந்தப்பட்ட தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT