ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு நீரிழிவு, பி.பி, மூட்டுவலி போன்ற உபாதைகள் இருக்கின்றன. மனநலமும் அடிக்கடி பாதிக்கிறது. கடன் அதிகமாக உள்ளது. வியாதிகள் நிரந்தரமாக குணமடையுமா? கடனை விரைவில் அடைக்க முடியுமா? அரசு வேலை செய்யும் என் மகனுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறோம். எப்போது திருமணம் கைகூடும்? எத்திசையில் பெண் அமையும்? பதவி உயர்வு உண்டா? - வாசகர், கோயம்புத்தூர்

DIN

உங்களுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி. மிருகசீரிஷ நட்சத்திரம். லக்னாதிபதி உச்சம் பெற்ற தொழில் ஸ்தானாதிபதியுடன் நட்பு ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். ஆறாமதிபதி களத்திரம், நட்பு ஸ்தானாதிபதியுடன் இணைந்து மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானின் பார்வை சுகத்தைக் கொடுக்கும். தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள புதபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் மனநலம், உடல்நலம் மேம்பட்டு, நிம்மதிகரமான சூழல் உண்டாகும். 2022 -ஆம் ஆண்டுக்குள் ஓரளவு வருமானம் வந்து சொத்துகள் சேரும்.
 உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி லக்னாதிபதி லக்னத்திலேயே ஆட்சி பெற்று மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். குடும்ப ஸ்தானத்தில் சுக பூர்வபுண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் இணைந்திருக்கிறார்கள். குடும்ப, களத்திர, நட்பு ஸ்தானாதிபதி உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்துவதால் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT