ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மூத்த மகன் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அனைத்து சிகிச்சைகளும் எடுத்து விட்டோம். எம்.ஏ., படித்திருந்தும் வேலைக்குச் செல்ல மறுக்கிறார். திருமணமும் ஆகவில்லை. இரண்டாவது மகனுக்கு நன்கு படித்திருந்தும் நிரந்தர வேலை அமையவில்லை. திருமணமும் தள்ளிப்போகிறது. இருவருக்கும் திருமணம் எப்போது கைகூடும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, சென்னை

DIN

உங்கள் மூத்த மகனுக்கு கன்னி லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்று பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானுடனும் அயன ஸ்தானாதிபதியான சூரியபகவானுடனும் கூடி இருக்கிறார். குருபகவான் அயன ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் ஆறாம் வீட்டையும் எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் லாபாதிபதியான சந்திரபகவானின் தடை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு உபாதைகள் முழுமையாகத் தீர்ந்து திருமணம் கைகூடும்.
 உங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம் கும்பராசி. லக்னாதிபதி, பாக்கியாதிபதிகள் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பது சிறப்பு. தர்மகர்மாதிபதியோகம் லாப ஸ்தானத்தில் உண்டாகிறது. புத ஆதித்ய யோகம், குருமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். இருவருக்கும் புத்திர பாக்கியம் உண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT