ஜோதிட கேள்வி பதில்கள்

எனக்கு வயது 48. சந்திர தசையில் குரு புக்தி நடக்கிறது. நான் உயர்கல்வி முடிக்கவில்லை. இதுவரை எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. பண விரயம் நிறைய ஏற்படுகிறது. இனி வரும் தசைகளாவது யோக தசைகளாக அமையுமா? சொந்தத் தொழில் அமையுமா? என்ன மாதிரியான தொழில் அமையும்? எப்போது அமையும்? - வாசகர், பழனி

DIN

உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். உங்களுக்கு லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சந்திரபகவானுடன் இணைந்து குருசந்திர யோகத்தையும் பெற்று எட்டாம் வீட்டையும் பத்தாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார். சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் உச்சம் பெற்று அஷ்டலட்சுமி யோகம் பெற்றிருக்கும் ராகுபகவானுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழரை நாட்டுசனியும் முடிவடைந்து விடும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து உங்கள் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பகுதி நேரமாக உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம். மற்றபடி தொடரும் தசைகள் யோக தசைகளாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT