ஜோதிட கேள்வி பதில்கள்

என் அண்ணனுக்கு 40 வயது ஆகிவிட்டது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நிறைய பெண் பார்த்தும் கைகூடாமல் போகிறது. அண்ணன் அம்மா இருவரும் மிகவும் விரக்தி அடைந்து விட்டனர். நான்கு மாதங்கள் தாண்டிவிட்டால் திருமணம் ஆகாது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். திருமணம் நடைபெறுமா? - வாசகி, ராசிபுரம்

DIN

உங்கள் அண்ணனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி குருபகவான் பாக்கியாதிபதியான சந்திரபகவானுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்திலுள்ள சூரிய, புத, சுக்கிர பகவான்களைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்கிறார். சிவராஜ யோகம் , புதஆதித்ய யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. தற்சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள புதபகவானின் தசை நடக்கிறது. அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரச் சொல்லவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT