ஜோதிட கேள்வி பதில்கள்

எனது மகன் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது. இவரது போட்டியாளருக்கு பதவி உயர்வு கிடைக்காததால் இவருக்கு பலவிதத்திலும் தொந்ததரவு கொடுத்து வருகிறார். இதனால் என் மகன் பல மாதங்களாக நிம்மதியில்லாமல் இருக்கிறார். இந்த தொல்லைகள் எப்போது முடிவுக்கு வரும்? எனது பேரன்களின் படிப்பு, ஆரோக்கியம், குடும்பத்தின் வருங்காலம் எப்படி இருக்கும்? - வாசகர், திருச்சி

DIN

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். தைரியாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகத்தைப் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். களத்திர நட்பு ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் லாப ஸ்தானத்தையும் அங்கு நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சனிபகவானையும் லக்னத்தையும் பார்வை செய்கிறார். இதனால் அனைத்து எதிர்ப்புகளையும் போட்டிகளையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்று விடுவார் என்று கூற வேண்டும். தற்சமயம் சனிபகவானின் தசையில் சந்திர புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குப்பிறகு அவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்ப்புகளும் தானாகவே மறைந்து விடும். புத்திர ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் குழந்தைகளும் நல்ல நிலையை எட்டி விடுவார்கள். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரச் சொல்லவும். அவரின் குடும்ப எதிர்காலம், ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT