ஜோதிட கேள்வி பதில்கள்

என் அண்ணனுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண் பார்த்து வருகிறோம். சொந்தமாக தொழில் செய்து வருவதைக் காரணம் கூறி தவிர்க்கிறார்கள். திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகி, ஆதம்பாக்கம்

DIN

உங்கள் சகோதரருக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். சர்ப்ப தோஷம் உள்ளது. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்றுள்ள லக்னாதிபதியுடனும் பூர்வபுண்ணியாதிபதியுடனும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள சுகாதிபதியுடனும் இணைந்திருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்றிருக்கும் குருபகவானின் தசையில் தர்மகர்மாதிபதியின் புக்தி நடக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT