ஜோதிட கேள்வி பதில்கள்

என் மாமனாரின் ( 80 வயது) பூர்வீக விவசாய பூமி பாகப்பிரிவினை என் கணவருக்கு சுமுகமாக முடியுமா? எங்களுக்கு விவசாயம் இறுதிவரை கைகொடுக்குமா? என் கணவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று கேதுவுடன் இணைந்திருப்பது குறையா? ராகுவுடன் சந்திரன் சேர்ந்து பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது குறையா? - வாசகி, பொள்ளாச்சி

DIN

உங்கள் கணவருக்கு விருச்சிக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதி தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து, பாக்கிய ஸ்தானத்திலுள்ள பாக்கியாதிபதி மற்றும் ராகுபகவான்களாலும் லாப ஸ்தானத்தில் சனிபகவானுடனும் அமர்ந்திருக்கும் குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் குருமங்கள யோகம், சந்திரமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. தொழில் ஸ்தானாதிபதி லாபாதிபதியுடன் குடும்ப ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பொதுவாக, பூர்வீகச் சொத்து கிடைப்பதற்கு பாக்கிய ஸ்தானமும் பூர்வபுண்ணிய ஸ்தானமும் பிதுர்காரகரான சூரியபகவானும் குறிப்பாக, வலுப்பெற்றிருக்க வேண்டும். அவருக்கு தற்சமயம் சுக்கிர மகாதசையில் சுயபுக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பிறகு குடும்பத்தில் சுமுக பாகப்பிரிவினை உண்டாகும். விவசாயத்தின் மூலம் நன்மைகள் உண்டாகும். மற்றபடி பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT