ஜோதிட கேள்வி பதில்கள்

மாளவிகா யோகம்

எனது மகள் வயிற்றுப் பேத்தி முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார். அவருக்குத் திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

DIN


எனது மகள் வயிற்றுப் பேத்தி முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்து இருக்கிறார். அவருக்குத் திருமணம் எப்பொழுது நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? 

வாசகி, ஈரோடு. 

உங்கள் பேத்திக்கு கும்ப லக்னம், ஆயில்ய  நட்சத்திரம். கடக ராசிலக்னம், அயன ஸ்தானாதிபதியான சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதியான சூரிய பகவான், பூர்வ புண்ணியாதிபதியான புத பகவான், தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான், கேது பகவான்களுடன் இணைந்திருக்கிறார். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைக் கொடுக்கிறார். தன ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக மூன்றாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்வது சிறப்பாகும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கதிபதியான புத பகவான், மாங்கல்ய ஸ்தானாதிபதியுமாகி நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுவதும் சிறப்பாகும். புத்திர பாக்கியமும் உண்டு. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குடும்ப ஸ்தானத்திற்கு சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும். அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் அரசு வேலை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT