முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

ஓராண்டுக்குள் திருமணம்

என் மகள் பிஇ படித்துள்ளார். வங்கிப் பணி போன்ற அரசுப் பணிகளுக்கு முயற்சி செய்து வருகிறார். அவருக்கு முதலில் வேலையா? திருமணமா? 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:


என் மகள் பிஇ படித்துள்ளார். வங்கிப் பணி போன்ற அரசுப் பணிகளுக்கு முயற்சி செய்து வருகிறார். அவருக்கு முதலில் வேலையா? திருமணமா? 

-வாசகர், திருச்சி.

உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி, களத்திர ஸ்தானாதிபதி ஆகிய மூவரும் களத்திர ஸ்தானத்திலேயே பலம் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. பூர்வ புண்ணியாதிபதி ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் வர்கோத்தமம் பெற்றமர்ந்திருப்பதும் சிறப்பாகும். எட்டாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் கேது பகவானுடன் அமர்ந்திருக்கிறார். ஆறாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகு பகவானுடன் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். தற்சமயம் சனி மஹா தசையில் புத பகவானின் புக்தி அடுத்த ஆண்டு இறுதி வரை நடக்கிறது. புத ஆதித்ய யோகம், சிவராஜ யோகம், கஜகேசரி யோகம், பெளர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. அவருக்கு மேற்கூறிய காலக் கட்டத்திற்குள் தகுதிக்கேற்ற சிறப்பான வேலை கிடைக்கும். வேலை கிடைத்த ஓராண்டுக்குள் தகுந்த இடத்தில் வரன் அமைந்து திருமணம் நடக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

முழு கட்டுரையைப் படிக்க →