ஜோதிட கேள்வி பதில்கள்

வெளிநாட்டு மாப்பிள்ளை அமைவார்

என் மகள் ஐடி நிறுவனம் மூலம் எட்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் பணிபுரியச் சென்றிருக்கிறார். அவருடைய திருமணம் எப்பொழுது நடைபெறும்? எப்படிப்பட்ட வரன் அமைவார்? 

DIN


என் மகள் ஐடி நிறுவனம் மூலம் எட்டு மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் பணிபுரியச் சென்றிருக்கிறார். அவருடைய திருமணம் எப்பொழுது நடைபெறும்? எப்படிப்பட்ட வரன் அமைவார்? 

-வாசகர், விருதாச்சலம்.

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னம், நான்காம் வீட்டிற்கதிபதியான குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் எட்டாம் வீட்டிற்கதிபதியான சந்திர பகவானுடன் (குருச் சந்திர யோகம்) இணைந்திருக்கிறார். "ஓடினவனுக்கு ஒன்பதில் குரு' என்பது ஜோதிட வழக்கு. குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்தால் அனைத்து யோக பாக்கியங்களும் அதிர்ஷ்டவசமாகக் கிட்டும். குருபகவானின் ஐந்தாம் பார்வை லக்னத்தில் அமர்ந்திருக்கும் ஏழு, பத்தாமதிபதியான புத பகவானின் மீதும், ராகு பகவானின் மீதும் படிகிறது.

இதனால் சர்ப்ப தோஷமும் குறைகிறது. குரு பகவானின் ஏழாம் பார்வை மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீட்டின் மீதும் படிகிறது. ஐந்தாமதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவானுடன் இணைந்திருக்கிறார். இரண்டாம் வீட்டிற்கும், மூன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. சந்திர மங்கள யோகம், குருமங்கள யோகம், ஆறாமதிபதிக்கு நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டில் வேலை செய்யும் வரன் அமைந்து திருமணம் நடைபெறும். எதிர்காலம் சிறப்பாக அமையும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... பாவங்கள் நீங்க திருக்குருகாவூர் வெள்ளடையீசுவரர்!

வரப்பெற்றோம் (15.12.2025)

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

SCROLL FOR NEXT